பிக்பாக்கெட் திருடன் கையும் களவுமாக பிடிப்பு
பர்சை திருடி சென்ற நபர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. போலீசார் பர்சை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 10:05 GMT
பிக்பாக்கெட் திருடன் கையும் களவுமாக பிடிப்பு
கோவை:இரத்தினபுரி நால்வர் வீதியை சேர்ந்த ஜெயராஜ் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று வி.கே.கே மேனன் சாலையில் உள்ள தேனீர் கடை முன் தனது நண்பருடன் பேசி கொண்டுடிந்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை திருடிய நபர் அங்கிருந்து தப்பித்துள்ளார்.இதனை கண்ட ஜெயராஜ் தனது நண்பரின் உதவியுடன் பர்சை திருடி சென்ற நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த கண்ணன்(24) என்பதும் கூலி வேலை செய்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பர்சை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.