பிடாரி செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம்,வண்டலூர் பிடாரி செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-27 09:36 GMT
ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த குமிழி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் ஆலயம் உள்ளது..இவ்வாலயம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் குமிழி கிராம மக்கள் ஒன்று கூடி கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் கோவில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கால யாக பூஜையுடன் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு வேள்விகள் முடிவுற்று மங்கள வாத்தியத்துடனும் பம்பை உடுக்கையுடனும் யாகசாலையில் உள்ள புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகள் கொண்டு சென்று கோவில் விமான கலசத்திற்கும் மூலவ அம்பாளுக்கும் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக பணிகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News