பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் 30–ஆம் ஆண்டு விளையாட்டு விழா

பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் 30–ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

Update: 2024-02-28 16:56 GMT

விளையாட்டு விழா

பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் 30–ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய ஹாக்கி பிரிவின் பொருளாளர், தமிழ்நாடு ஹாக்கி பிரிவின் தலைவர், ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு, மேம்பாட்டுக் குழு உறுப்பினர், சேகர்.து.மனோகரன் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விளையாட்டுத்துறை மாணவிகள் சார்பாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பி.கே.ஆர். மகளிர் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் வெங்கடாச்சலம் விழாவில் பங்கேற்று ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் அவர்தம் உரையில், உடலினை உறுதிசெய் என்பதற்கு இணங்க மாணவியரிடையே விளையாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார். இவ்விளையாட்டுத்துறையில் தற்போது குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய அறிமுகத்தினை மாணவரிடையே எடுத்துரைத்தார். கல்வி மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் மகளிர் தனது திறன்களை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டிய அவசியத்தினையும் வெளிப்படுத்தினார். இவ்விழாவில் மாணவர்கள் பிரமிட் உருவாக்கம், ஓட்டப்பந்தயம், விளையாட்டுத்துறை மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடைபெற்று, அதற்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மற்றும் கல்லூரியின் பல்வேறு தரப்பட்ட பணியாளர்கள் என அனைவருக்கும் பலவிதமான போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் 1700 மாணவியர் மற்றும் 120 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News