கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

காக்காவேரி முத்தாயம்மாள் கலைக் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

Update: 2024-01-19 14:51 GMT

நாமக்கல் மாவட்டத்தில், 1.5 கோடி மதிப்பில் 5 இடங்களில் அறிவு சார் திறன் மையம் திறப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் கலைக் அறிவியல் கல்லூரியில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தொடங்கி வைத்தார். முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர் , தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வுசெய்தனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு(Diploma), பட்டப்படிப்பு(Degree), ஐ.டி.ஐ (தொழிற்பழகுநர்) பயிற்சி மற்றும் கணினியியல் (Java, Tally) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் என 500 க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

முகாமில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் உமா பேசுகையில், கல்வியில் நாமக்கல் மாவட்டம் தமிழக அளவில் முன்னோடியாக உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் கவனத்தை சிதற விடக்கூடாது. செல்போன் பயன்பாட்டில் உள்ள நல்ல விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை பெறுவோரில் 50 சதவீதம் பேர் வேலையில் தொடருவதில்லை.

சம்பளம் குறைவு என்கின்றனர். வேலையில் திறனை வளர்த்துக் கொண்டால் பிறகு நல்ல சம்பளம் பெறலாம். பல்வேறு போட்டித் தேர்வுக்கு பயன்பெறும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், பட்டணம், மோகனூர், நாமக்கல், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட 5 இடங்களில் அறிவு சார் திறன் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் இயக்குனர் டாக்டர் ஆர்.செல்வகுமாரன், வந்தேரா முத்தாயம்மாள் இன்ஸ்டியூட் செயலாளர் ஆர். முத்துவேல் ராமசாமி, நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலக அலுவலர் டி. மல்லிகா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News