முக்கூடலில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பலகை வைப்பு
முக்கூடல் தாமிரபரணி ஆற்றின் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பலகை வைக்கபட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 15:10 GMT
அறிவிப்பு வைப்பு
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை இன்று வைக்கப்பட்டது. குற்றாலம், மணிமுத்தாறுக்கு அடுத்தபடியாக குளிப்பதற்கு முக்கூடல் தாமிரபரணி ஆற்றிற்கு அதிகமாக மக்கள் கூட்டம் வருகிறது. இங்கு வருபவர்கள் கழிவு துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள், மது பாட்டில்கள் போன்றவற்றை ஆற்றில் வீசுகின்றனர்.
எனவே இதனை தடுக்க இந்த பலகை அமைக்கப்பட்டுள்ளது.