ஐந்து இடங்களில் அலங்கார வளைவு அமைக்க திட்டம்
பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஐந்து இடங்களில் அலங்கார வளைவு அமைக்க திட்டம்;
Update: 2023-12-01 16:35 GMT
பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஐந்து இடங்களில் அலங்கார வளைவு அமைக்க திட்டம்
பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில்பழநியில் முக்கிய இடங்களில் அலங்கார வளைவுகள், வின்ச், ரோப் கார் பகுதியில் லிப்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழநி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. முதல் கட்டமாக பழநி பஸ் ஸ்டாண்ட், கிழக்கு கிரி வீதி,மேற்கு கிரி வீதியில் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அலங்கார வளைவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விடுதிகள் புனரமைப்பு, வின்ச் ஸ்டேஷன் பகுதியில் இரண்டு, ரோப் கார் பகுதியில் ஒரு லிப்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.