தூத்துக்குடி கல்லூரியில் கோள்கள் திருவிழா

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோள்கள் திருவிழா கல்லூரி பொன்விழா கலையரங்கில் நடந்தது.

Update: 2024-06-09 11:46 GMT

கோள்கள் திருவிழா

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோள்கள் திருவிழா கல்லூரி பொன்விழா கலையரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கனகராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் குருவாசுகி பேராசிரியர் அமுதரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வானவியலும் மனித வாழ்வும் என்ற தலைப்பிலும் தூத்துக்குடி அஸ்டரோ கிளப் மாவட்ட கருத்தாளர் ஜெயபால் விண்வெளியில் வேலைவாய்ப்பு பற்றியும், மாதிரி பள்ளி வானவியல் தொலைநோக்கி பயிற்றுநர் முருகப் பெருமான் டெலஸ்கோப் கையாளுவது குறித்தும் பேசினர்.

மாணவி ரோகிணி தலைமையிலான குழுவினர் கோள்கள் பற்றிய பங்கு நாடகத்தை வியக்க தக்க முறையில் நடித்துகாட்டி உயிர் கோளம் புவி ஆபத்தில் இருப்பதை உணர்த்தினர். கோள்கள் திருவிழா தொகுப்பு வெளியீடப்பட்டது. கோவையில் ஜுன் 22 நடைபெறும் கோள்கள் திருவிழா நிறைவு விழாவில் பங்கேற்பது குறித்து பேசப்பட்டது.

Tags:    

Similar News