கிள்ளியூரில் விளையாட்டு மைதானம்.!

கிள்ளியூரில் விளையாட்டு மைதானம், நீதிமன்றம் அமைக்க அமைச்சரிடம் எம்எல்எ கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-10-29 09:10 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்கும் முறையாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லை. ஆகவே கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நலன் கருதி 2022 - 2023 ம் ஆண்டு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது அரசு சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட மினி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். மேலும் கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News