ப்ளீஸ்... யாரும் பார்க்க வர வேண்டாம் ! அமைச்சர் பெரியசாமி
ஓய்வெடுக்குமாறு டாக்டர் அறிவுறுத்தியிருப்பதால் நாளை தனது பிறந்த நாளன்று தன்னை யாரும் நேரில் பார்க்க வேண்டாம் என அமைச்சர் பெரியசாமி வேண்டுகொள் விடுத்துள்ளார்.
Update: 2024-01-05 10:26 GMT
திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாள் நாளை ஜன.6ல் கொண்டாடப்படுகிறது. அமைச்சரை பார்க்க யாரும் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்டாய ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். இந்த நிலையில் வரும் 6அன்று எனது பிறந்த நாளை கொண்டாடவில்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்கள் என்னை நேரில் சந்திப்பதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.