பிளஸ் 2 பொதுத்தேர்வு; கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமிடத்தை மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு துவங்கியது 85 மையங்களில் 20 ஆயிரத்து 156 மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். .
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கா மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை 85 தேர்வு மையங்களில் மொத்தம் உள்ள 197 அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 9,419 மாணவர்களும் 10, 737 மாணவிகளும் என மொத்தம் 20,156 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று தேர்வு எழுத பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றதுடன் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத அதேபோல் ஆர் சி பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுத சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது, பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த அரசு பொது தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி சராயு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்,
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி மகேஸ்வரி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் மாணவர்களின் தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க தனி பறக்கும் பாளையம் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, இதில் தேர்வில் மாணவ, மாணவிகள் காப்பியடிப்பதை தடுக்க தனி பறக்கும் படையும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது