பிளஸ் டூ மாணவி தற்கொலை காவல்துறையினர் விசாரணை
பாலக்கோடு அருகே பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி தற்கொலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை;
Update: 2024-04-05 04:44 GMT
காவல்துறை விசாரணை
police station
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட மேஸ்திரி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் , பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதியிருந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால், மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, சிலம்பரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுபற்றி முத்துசாமி பாலக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கோடு காவல்துறையினர் சிலம்பரசியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.