பி எம் சுராஜ் போர்ட்டல் துவக்க விழா - கவர்னர் பங்கேற்பு
சுதந்திரத்திற்கு பின் முன்னேற்றம் முன்னேற்றம் என பேசி வந்தாலும் கூட 30 கோடிக்கு மேல் மக்கள் அடிப்படை தேவைக்காக சிரமப்பட்டு வருவதாக திருப்பூரில் நடந்த பி எம் சுராஜ் போர்ட்டல் துவக்க விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் மகளிர் மற்றும் சுய தொழில் முனைவோர் இணையம் வழியாக எளிதில் கடன் வழங்கும் வகையில் பி.எம் - சுராஜ் போர்ட்டல் துவக்க விழா நடைபெற்றது. இதனை நாடு முழுவதும் பயனாளிகள் பார்க்கும் வகையிலும் பயனாளிகளிடம் பிரதமர் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்வும் நடைபெற்ற நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பிரதமர் காணொளி வாயிலாக பேசியதை பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ஆளுநர் ஆர் என் ரவி நமது நாடு வேகமாக மாறி வருவதாகவும் , சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகி முன்னேற்றம் முன்னேற்றம் என்று நாம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் 30 கோடிக்கு மேல் மக்கள் அடிப்படை தேவைக்காக சிரமப்பட்டு வருவதாகவும் , அவர்களும் நம் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் பின் தங்கி இருப்பதை நம்மால் ஏற்க முடியாது , இந்த நாடு பல ஏற்றத்தாழ்வுகளை கொண்டது சிலருக்கு உணவு கிடைக்கிறது சிலருக்கு உணவு கிடைப்பதில்லை , நாட்டின் ஒவ்வொரு நபரும் நமது குடும்ப உறுப்பினர்கள் அவர்களை புறம் தள்ளிவிட்டு முன்னேற்றம் அடைய முடியாது , அவர்களையும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
பிரதமர் துவங்கி வைத்த பிரதமர் சூராஜ் போர்ட்டல் அனைவரும் சமமாக உயர வழிவகுக்கும். தொழில், கல்வி என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் நம் நாட்டில் பாதாள சாக்கடை குளிகளில் இறங்கி வேலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் , வேலைக்காக உயிரைவிடும் சூழல் இன்னும் நிலவி வருகின்றத, இது வேதனை அளிக்கிறது. அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும், ஒவ்வொரு குடிமகனும் சுயமரியாதையுடன் உழைக்க வேண்டும் சுய சுதந்திரம் , வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும் திறன் இருந்தால் சுயமரியாதையாக இருக்க முடியும் அதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும் இதில் பயனடையும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார்.