பாமக வேட்பாளர் திலக பாமா கொடைக்கானலில் தேர்தல் பிரசாரம்

திண்டுக்கல் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் திலக பாமா கொடைக்கானலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-15 06:46 GMT

தேர்தல் பிரசாரம் 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளராக பிஜேபி கட்சியின் கூட்டணி கட்சியான பாமக கட்சி சார்பில் திலக பாமா போட்டியிடுகிறார், அதனை தொடர்ந்து நேற்று  கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க வந்த அவர் திறந்த வெளி வேனில் நின்று பேசுகையில் அதிமுகவில் சிகப்பாக இருப்பது எம்ஜிஆர் இல்லை, அவர்கள் நம்பியார் என் தெரிவித்தார். ஆபரேசன் சக்சஸ் பேசண்ட் டெத் அது போல செயல்பட்டவர் முன்னாள் எம்பி வேலுச்சாமி என விமர்சித்தார், வருடத்திற்கு 5கோடி 5 வருடத்திற்கு 25 கோடி ரூபாய் நாடாளுமன்ற தொகுதி நிதி வாங்கி கொண்டு, காணாமல் போன நாடாளுமன்ற உறுப்பினர் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல மத்திய அரசு 111 கோடி ரூபாய் ஒதுக்கியது அதனை மொத்தமாக நாமம் போட்டு விட்டு சென்றனர், மேலும் ரோப் கார் வெளிநாடுகளில் அதிகம் உள்ளது, ஆனால் அது போன்று கொடைக்கானலில் அமைக்க மத்திய அரசிடம் நிறைய திட்டம் உள்ளது, நாமெல்லாம் தீபாவளிக்கு புது துணி வாங்க திட்டம் இடுவோம் ஆனால் திமுக அரசு அதனை விட்டு விட்டு அரசு டாஸ்மாக் கடைகளில் அதிக மது விறப்னை செய்ய இலக்கு நிர்ணயம் செய்கிறது, எல்லா அணைகளையும்  நிரப்பும் மலைகளின் இளவரசிக்கு முறையான குடி நீர் இல்லை, கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு 300 ரூபாய் அவர்கள் கொடுப்பது என்பது நமது விலா எலும்பை எடுத்து அதனை நமக்கு திரும்ப கொடுக்கும் அரசு இந்த திமுக, கழுதையின் விலை 20ஆயிரம், ஆனால் ஓட்டுக்கு 300 ரூபாய் என சுருக்கும் எண்ணம் எனக்கு வராது எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News