பாமக பாஜக கூட்டணி உறுதி பாமக பொதுச்செயலாளர் தகவல்

பாமக பாஜக கூட்டணி உறுதி பாமக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-19 08:39 GMT

வடிவேல் ராவணன்

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தனித்தனியே மாலை 4:30 மணி முதல் தொடர்ந்து மூன்று மணி நேரமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் அவரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜி கே மணி ,வடிவேல் ரவணன்,ஏ கே மூர்த்தி, அண்பழகன், பாலு , உள்ளிட்ட 19 உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வாடமாவட்டகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் என வட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 90 பேர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளதாகவும் அந்த பேட்டியில் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற அதிகாரத்தை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கியதாகவும் அந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முடிவினை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒருமனதாக எடுத்துள்ளார் என்றும் வடிவேல் ராவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று காலை பிரதமர் மோடி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் வீடியோ கால் மூலம் பேசியதை அடுத்து பாஜக வுடன் கூட்டணியை பாமக உறுதி செய்துள்ளது. மேலும் 10 சீட்டும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

மேலும் அன்புமணி ராமதாஸ் க்கு அமைச்சரவையில் இடம் அளிப்பதாக வாய்மொழி உத்தரவு கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாமக நிர்வாகிகள் சிலர் அதிமுகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என பேசி உள்ளனர். இருந்த போதிலும் நிர்வாகிகள் மத்தியில் வருத்தம் தெரிவித்த பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்து முடிவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று தெரிவித்த பின்னரே ப டெல்லியுடன்(பாஜக) கூட்டணி என்று கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூட்டம் முடிந்து வெளியே வந்த நிர்வாகிகள் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டனர்.

Tags:    

Similar News

Test