திமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்
திருவண்ணாமலை மாவட்டம்,கொங்கராம்பட்டு பகுதியில் எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.;
Update: 2024-04-27 16:45 GMT
திமுகவில் இணைவு
திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி அடுத்த கொங்கராம்பட்டு ஊராட்சி ஒன்றிய செயலாளர் S. மோகன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மாதவன் தலைமையில் பாமகவை சேர்ந்த இளைஞர்கள் எம்.எஸ். தரணிவேந்தன் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போது மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஆரணி தொகுதி பொறுப்பாளர் SS. அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.