சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாமக கட்சியினர் போராட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாமக கட்சியினர் போராட்டம். போலீசார் உடன் தள்ளுமுள்ளு ஈடுபட்டதால் பரபரப்பு.
Update: 2024-03-27 08:30 GMT
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருள் மற்றும் பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆகியோருடன் ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது அவருடன் வந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முற்பட்டனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பாமக கட்சி நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பாட்டாளி மக்கள் கட்சியினர் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.