பாமக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி பாமக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் மற்றும் ஒரே கட்டமாக நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட வன்னியர் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும் பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினரும் ஜிகே மணி, மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் ஆகியோர் தலைமையில் தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தகுந்த பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.