போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
பல்லடத்தில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
Update: 2024-06-27 11:31 GMT
கடந்த 10.09.2021 அன்று நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் துண்புறுத்தல் கொடுத்ததற்காக பல்லடம் நாச்சிபாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ்(23)என்பவர் மீது பல்லடம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் சாட்சிகளை உடனடியாக விசாரணைக்காக ஆஜர்படுத்தவும், இவ்வழக்கை விரைந்து விசாரித்த திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி விசாரணை முடித்து எதிரியின் மீதான இரு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 30ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.இவ்வழக்கில் எதிரிக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர பணியாற்றிய காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா வெகுவாகப் பாராட்டினார்.