சீட்டு நடத்தி மோசடி ரவுடி கைது
வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்க்காகுறிச்சி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சோமன் மகன் சந்தோஷ்குமார் (43) இவர் கறம்பக்குடி நெய்வேலி ரோட்டில் அமைந்துள்ள மகி ஆட்டோ பைனான்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த பைனான்ஸ் கடையில் கடந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி TN-55-AB-7278 என்ற இருசக்கர வாகனத்தின் ஆர்சி புக்கை அடமானம் வைத்து ரூ-10,500 வாங்கியுள்ளார் அதனை தவணை முறையில் ரூ28,700 பணம் கொடுத்தும் தனது வாகனத்தின் ஆர்சி புக்கை கேட்டுள்ளார். அதற்கு பைனான்சியர் தான் கந்து வட்டிக்கு தான் பணம் கொடுத்ததாகவும் தான் சொன்ன தேதிக்கு பணம் தரவில்லை என்று அதற்கு மீட்டர் வட்டி தர வேண்டும் இன்னும் தர வேண்டும் என்று ஆர்சி புக்கை பைனான்சியர் தர மறுத்துள்ளார்.
பின்னர் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி பைனான்சியர் மீண்டும் சந்தோஷ்குமாரின் மற்றொரு இரு சக்கர வாகனமான TN-55-AS-3516 என்ற இருசக்கர வாகனத்தையும் அதன் ஆர்சி புக்கையும் எடுத்துக்கொண்டு பைனான்சியர் மிரட்டி வந்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி மாலை 6:15 மணியளவில் சந்தோஷ்குமார் வேலை செய்யும் இடமான திருமணஞ்சேரி ஆர்ச் அருகே உள்ள SMS Electric Battery Bike கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது 6 எலக்ட்ரிக் பைக்கை பைனான்சியர் எடுத்துள்ளார் அதற்கு சந்தோஷ்குமார் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு பைக்கை அடித்து சைடு லாக்கு முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி நான் பணம் கேட்டால் கொடுக்க மாட்டியா உனக்கு பயமே இல்லாம போய்விட்டது என அசிங்கமாக பேசிவிட்டு காலில் இருந்த செருப்பை கழட்டி பைனான்சியர் செல்வராஜ் சந்தோஷ் குமாரை தாக்கியுள்ளார். மேலும், கத்தியை காட்டி கொலை செய்வதாக மிரட்டி உள்ளார் சந்தோஷ் குமார் சத்தமிட்டதும் சந்தோஷ்குமாரின் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 3000 பணத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
இது சம்பந்தமாக சந்தோஷ்குமார் கறம்பக்குடி காவல் நிலையத்தில் பைனான்சியர் கந்துவட்டி தரக்கோரி கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் தனது வாகனத்தின் பாகங்களான பத்தாயிரம் மதிப்புள்ள பாகங்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சந்தோஷ் குமார் புகார் மனு அளித்தார் புகார் மனு அடிப்படையில் கறம்பக்குடி போலீசார் மகி பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளும் பொழுது பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் 15 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சாந்தம்பட்டியை சேர்ந்த மலையப்பன் மகன் செல்வராஜ் என்பது தெரியவந்தது மேலும் பைனான்ஸ் நிறுவனம் அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது கறம்பக்குடி போலீசார் மற்றும் கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு பைனான்ஸ் அலுவலகத்தை சோதனை செய்து அதிலிருந்த ஆவணங்களை கைப்பற்றி பைனான்ஸ் அலுவலகத்தை சீல் வைத்து செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பதினைந்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி செல்வராஜ் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி பணத்திற்க்காக கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.