விவசாயி மீது போலீசார் தாக்குதல் -நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாதிநாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் அதே பகுதியை சார்ந்த பக்கத்து நிலத்துக்காரரான சின்னத்தம்பி என்பவருக்கும் விவசாய நிலத்தில் சென்று வர வழி பிரச்சனை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றதில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் பெருமாள் என்பவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை பெருமாள் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு போலீஸ் சீருடையில் வந்த போலீஸ் ஒருவர் எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அளித்த தீர்ப்பை அவமதிப்பு செய்யும் விதமாக எதிர்தரப்புக்கு ஆதரவாக பேசி தன்னை தாக்கியதாகவும், அவரை தொடர்ந்து சின்னத்தம்பி மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதாகவும் கூறி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக கூறக்கூடாது, நீதிபதியை அவதூறாக பேசியதாக கூறக்கூடாது என காவல்துறையினர் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.