கரூரில்,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி

கரூரில்,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி செய்து கூட்டத்தை கலைத்தனர்.;

Update: 2024-06-17 15:36 GMT

போலீஸ் தடியடி

 கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியை விரிவாக்கம் செய்வதற்காக மாநகராட்சி சார்பில் கடைகளை அகற்றக் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட கடை வியாபாரிகள் இன்று திடீரென கரூர் - திருச்சி சாலையில், காந்திகிராமம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கடை நடத்தும் சிறு வியாபாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் இப்படி திடீரென போராட்டம் நடத்தக்கூடாது. இதனால் பாதிப்பு ஏற்பட்டால்,சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என தெரிவித்தனர்.

இதனை கடை உரிமையாளர்கள் ஏற்க மறுத்தனர். காவல் ஆய்வாளர் முத்துக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்ய நேரிடும் என எச்சரித்தார். ஆயினும், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், லேசான தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை சிலரை கைது செய்து போக்குவரத்தை சரி செய்தனர்.இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags:    

Similar News