நெல்லையில் வாகனங்களுக்கு சங்கிலி போட்ட காவல்துறை

Update: 2023-10-29 14:53 GMT

சங்கிலி போடும் காவல்துறை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் பொதுமக்கள் இப்போது இருந்தே தங்களுக்கு தேவையான புதிய துணிகளை வாங்கி செல்கின்றனர். நெல்லையில் டவுன் மற்றும் வண்ணார்பேட்டையில் ஏராளமான ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜவுளி கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நோ பார்க்கிங் ஏரியா பகுதியில் விடுவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மாநகர காவல் துறை ஆணையாளராக பொறுப்பேற்ற மகேஸ்வரி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாஜலபதி தலைமையில் காவலர்கள் நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் ஜவுளி கடை முன்பாக நோ பார்க்கிங் ஏரியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காவல்துறையினர் செயின் போட்டு அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Tags:    

Similar News