காவல் சோதனை சாவடியில் பகலில் ஒளிரும் மின் விளக்குகள்.

காவல் சோதனை சாவடியில் பகலில் ஒளிரும் மின் விளக்குகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2023-12-17 12:34 GMT

ஒளிரும் விளக்குகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் திருமழிசை பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டுமேடு பகுதியில் பி-7 வெள்ளவேடு காவல் நிலைய சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து, கனரக, இலகுரக, இரு சக்கர வாகனம் என தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் இரவு மட்டும் ஐந்துபேர் பணி மேற்கொண்டு வாகனங்களை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகனச் சோதனை போலீசார் பணி மேற்கொள்வதை முன்னிட்டு பகலாக்கும் விதமாக ஐந்து வெள்ளை மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஐந்து மின் விளக்குகளும் பகல் நேரத்தில் எரிந்து மின்சாரம் வீணாகி வருவது இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் சோதனைச் சாவடியில் பகலில் ஒளிரும் மின் விளக்குகளை ஆப்செய்து, மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News