சேலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு

சேலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-06 04:59 GMT

சேலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மாநகரில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக நேற்று சேலம் டவுன், செவ்வாய்பேட்டை மற்றும் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட 5-க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது தேர்தல் அமைதியாக நடக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News