சிபிஎம் கட்சி குறித்து அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார்
Update: 2023-11-13 05:09 GMT
மனு அளிக்கவந்த கட்சியினர்
சி.பி.எம் கட்சி மீது அவதூறு பரப்பியவர் மீது சி.பி.எம் சார்பில் குமாரபாளையம் போலீசில் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எங்கள் கட்சி மாநில குழு அலுவலகம் ராமமூர்த்தி நினைவகம், சென்னை, என பெயர் பொறிக்கப்பட்டு அமைந்துள்ளது. எங்கள் தலைவரை, கட்சியை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், சில சமூக விரோதிகள் ராமமூர்த்தி நினைவிடம் முன்பு, அடுத்தவன் காலை நக்கி பிழைப்பவன் கம்யூனிஸ்ட் என்று குறிப்பிட்டு, வாட்ஸ் அப்பில் பரப்பி உள்ளனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவை நகர செயலர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகி முருகேசன், நிர்வாகிகள் வெங்கடேசன் உள்பட பலர் குமாரபாளையம் போலீசாரிடம் அளித்தனர்.