இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதல்

கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-04-18 17:25 GMT

இருசக்கர வாகன விபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, சி.கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ராஜ்குமார் வயது 48. இவர் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7 மணியளவில் தென்னிலையில் இருந்து சின்ன தாராபுரம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பனையம்பாளையம் ரமேஷ் மளிகை கடை அருகே சென்றபோது, அதே சாலையில் அரவக்குறிச்சி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் அருணாச்சலம் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், ராஜ்குமார் ஓட்டிச் சேர்ந்த டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் ராஜகுமாருக்கு இடது தோள்பட்டை, இடுப்பு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டி தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராஜ்குமாரின் தாயார் முத்துலட்சுமி வயது 60 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Tags:    

Similar News