இருசக்கர வாகனம் திருட்டு – காவல்துறையினர் விசாரணை
தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டியில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-21 12:08 GMT
இருசக்கரவாகனம் திருட்டு
தேனி அருகே ஊஞ்சாம்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பீர்முகமது இவர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் பார்த்த பொழுது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து நேற்று அல்லி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அல்லி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.