பள்ளி மாணவன் சடலமாக மீட்பு காவல்துறையினர் விசாரணை

தாசம்பட்டி பகுதியில் பள்ளி மாணவன் சடலம் பென்னாகரம் காவல்துறையினர் விசாரணை

Update: 2024-06-14 06:05 GMT
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, 17 வயது சிறுவன், சடலமாக இருப்பதாக, பென்னாகரம் காவல்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தது பென்னாகரம் அருகே பண்டஅள்ளி ஊராட்சி திப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் என்பவரது மூத்த மகன் தெரியவந்தது. இவன் பண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ்1 முடித்து, தற்போது பிளஸ்2 செல்ல இருந்தான். கடந்த 5 நாட்களுக்கு முன், பெருமாள் அவரது மனைவி குமுதா ஆகியோருக்கு இடையே, குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவனிடம் கோபித்துக் கொண்டு, குமுதா தாசம்பட்டியில் உள்ள தனது தாய் வழி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். தனது பாட்டி வீட்டில் இருந்த மாணவன் திப்பம்பட்டிக்கு சென்று தனது தந்தையை சந்தித்து விட்டு வருவதாக, நேற்று முன்தினம் மாலை கூறி சென்றுள்ளான். அதன் பின்னர், நேற்று காலை தாசம்பட்டி அரசு பள்ளி அருகே மர்மமான முறையில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பென்னாகரம் டிஎஸ்பி மகா லட்சுமி தலைமையில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News