மீன்பிடி வள்ளங்களில் எஞ்சின் திருடிய மர்மம் நபர்கள்
கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை பகுதியில் பகுதியில் மீன்பிடி வள்ளங்களில் எஞ்சின் திருடிய மர்மம் நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை மகன் பெலிங்டன் நாயகன் (29). இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 24ஆம் தேதி பெலிங்டன் நாயகனும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் வின்சென்ட் ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான பைபர் வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கரை திரும்பிய பிறகு 2 வள்ளங்களையும் கரையோரம் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
மறுநாள் காலை இருவரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்காக திரும்பி வந்த போது, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வள்ளங்களிலிருந்தும் எஞ்சின்கள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக குளச்சல் மரைன் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார் தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, எஞ்சின்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.