வங்கி கண்ணாடியை உடைத்த நபரிடம் போலீசார் விசாரணை
Update: 2023-11-17 05:16 GMT
இந்தியன் வங்கி
வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி கிளை உள்ளது. இந்நிலையில் சின்னக்கொள்ளியூரை சேர்ந்த கண்ணதாசன் பணம் எடுப்பதற்காக நேற்று மதியம் 3:00 மணியளவில் வங்கிக்கு சென்றார். வங்கியில் பணம் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். பின்னர் கண்ணதாசன் வங்கி மேலாளர் அறைக்கு சென்று பணம் கேட்டு மேலாளர் அறையின் கண்ணாடியை கையால் உடைத்தார். இதில் கண்ணதாசனின் கையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் காயமடைந்த கண்ணதாசனை மீட்டு வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.