முன் விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல்.
குலசேகரம் அருகே விவசாயியை தாக்கிய கட்டிடத் தொழிலாளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-15 15:30 GMT
கோப்பு படம்
குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம்.விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ராஜன், சண்முகத்தின் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது.இதில் சண்முகத்தின் நெற்றில் பலத்த காயம் ஏற்பட்டு அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனே ராஜன், சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். காயம் அடைந்த சண்முகம் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.