பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு போலீசார் விசாரணை

பெருவங்கூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-07 07:38 GMT

செயின் பறிப்பு

கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் கோபி மனைவி ரம்யா, 22; கடந்த 4ம் தேதி இருவரும் வீட்டிற்கு முன்புறம் உள்ள போர்டிகோவில் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 12:30 மணியளவில் மர்மநபர்கள் 2 பேர் கணவன் கோபியை கட்டையால் தாக்கி விட்டு, அவரது மனைவி ரம்யா அணிந்திருந்த 3 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News