குழந்தை கடத்தல் வதந்தி – விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி குறித்து பொள்ளாச்சி அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியில் விழிப்புணர்வு காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2024-03-16 10:27 GMT
விழிப்புணர்வு ஏற்படுத்திய போது

16 கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி, கோவை போன்ற பகுதிகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் அதனை பொதுமக்கள் தடுத்ததாகவும் கூறி சமூக வலைதளங்களில் வீடியோகள் பரவி வருகிறது. இந்நிலையில் அந்த வீடியோ வதந்தி என்பதை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் போலீசார் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் மற்றும் காவலர் சுப்பையா பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் குழந்தைகள் கடத்தல் குறித்து பரப்பப்படும் செய்தி வதந்தி அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் உங்களுக்கு சந்தேகப்படும்படியான புதிய நபர்கள் யாராவது உங்கள் பகுதியில் நடமாடினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மேலும் குழந்தை கடத்தல் சம்பவம் உண்மை இல்லை என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News