அனுமதியின்றி போராட்டம் நடத்திய 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

நித்திரவிளையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 200 பேர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-03-15 04:42 GMT

ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, வட்டார குழு உறுப்பினர் அனீஷ் மற்றும் கண்டால் தெரியும் 6 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நித்திரவிளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது சம்பந்தமாக நித்திரவிளை சிறப்பு எஸ்.ஐ. கொடுத்த புகார் மீது மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் உட்பட கண்டால் தெரியும் 200 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News