தேவிகாபுரம் சந்தையில் குற்றங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் வார சந்தையில் சேத்துப்பட்டு போலீசார் ஒலிபெருக்கி மூலம் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் வார சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது தேவிகாபுரத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சந்தையை நாடுகின்றனர். சந்தையில் கூட்டம் அதிகமாக உள்ள வேளையில் சமூக விரோதிகள் பிக்பாக்கெட் அடித்தல்,பைக் திருடுதல்,பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கும்போது பெண்களின் நகைகளை திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அது மட்டும் அல்லாமல் சந்தையில் வியாபாரிகள் சாலையில் ஓரம் கடைகளை விரிப்பதால் சேத்துப்பட்டு போலீஸ் சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது இவற்றை தடுக்க சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் தமிழரசி சப்- இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், முருகன் மற்றும் போலீசார் சந்தையில் கூடிய பொது மக்களுக்கு தங்களுடைய பொருட்களையும் குழந்தைகளையும் உடைமைகளையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும் சாலை விபத்துகளை தடுக்க கவனமாக செயல்பட வேண்டியும் பிரச்சாரம் செய்தனர்.