விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் காவல்துறை பார்வையாளர் ஆய்வு

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் காவல்துறை பார்வையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-23 16:03 GMT

அதிகாரி ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக 275 வாக்குச்சா வடிகளில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இத்தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகளை கண்காணிக்க காவல்துறை பார்வையாளராக அஜய்குமார் பாண்டேவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு களை பார்வையிட்டார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ள அறையை காவல்துறை பார்வையாளர் அஜய்குமார் பாண்டே பார்வையிட்டார். அப்போது அங்கு 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்தனர். உடனே அருகில் இருந்த போலீஸ் துணை சூப் பிரண்டு சுரேஷ், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோரிடம், ஏன் 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்று கேட்டார். அதற்கு அவர்கள், மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசார்களில் பலர், கள்ளக்குறிச்சி சம்ப வத்திற்காக அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளதாக குறிப்பிட்டனர்.

இருப்பினும் இதனை ஏற்க மறுத்த காவல்துறை பார்வையாளர் அஜய்குமார் பாண்டே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 2 போலீசார்களும், அந்த அறைக்கு செல்லக்கூடிய பிரதான நுழைவுவாயில் பகுதியில் 2 போலீசார்களும் என 4 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தர விட்டார்.

Tags:    

Similar News