1,066 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1066 முகாம்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-03 06:04 GMT

போலியோ சொட்டு மருந்து முகாம் 

இன்று 3ம் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் உட்பட 1,066 இடங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று 3ம் தேதி நடக்கிறது.

Advertisement

22 நடமாடும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் 5 வயதுக்குட்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 34 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க விரிவான பணிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகள் மேற்கொள்ள 4,235 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7:00 மணி முதல் 5:00 மணி வரை செயல்படும். தற்போது பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இம்மையங்களில் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News