ஓசூர் : போலியோ சொட்டு மருந்து முகாம்

ஒசூர் அடுத்த தளி ஊராட்சி ஒன்றியம், பேளகொண்டப்பள்ளி நல்வாழ்வு மையத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

Update: 2024-03-03 12:15 GMT

போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் நடைப்பெற்றது. இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த தளி ஊராட்சி ஒன்றியம் பேளகொண்டப்பள்ளி நல்வாழ்வு மையத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்.

Tags:    

Similar News