தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,510மையங்களில் போலியோ சொட்டு மருந்து
தஞ்சாவூரில் 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது;
தஞ்சாவூர் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று 1,510 மையங்களில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை துவக்கி வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியதாவது: தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் போலியோலினால் எந்தக் குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயைப் பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது.
இதன் மூலம் போலியோ நோயைப் பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச் சூழலிருந்து அறவே ஒழிக்கலாம். இந்த முகாம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 1,59,716 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்கென நகரப் பகுதிகளில் 128 மையங்களும் ஊரக பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1,510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணியில் 6210 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும், 186 மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்றார்.
லவ் llஇம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் பா.கலைவாணி, நகர நல அலுவலர் சுபாஷ்காந்தி மற்றும் பலர் உடன் உள்ளனர்.