சக்திநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு
எலச்சிபாளையம் அருகே, சக்திநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் மாசு கட்டுப்பாடு குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
மாசுக்கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு
சத்திநாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், மாசுகட்டுபாடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டிச.2ல், உலக சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, குமரமங்கலம் சுவாமி விவேகானந்தா பார்மசி கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் சத்திநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு சுற்றுபுறத்தை பேணிகாத்தல்,
தனது சுகாதாரத்தை பேணுதல் மற்றும் தொற்றுநோய்கள் பற்றியும் ஆடல், பாடலுடன் பதாகைகள் ஏந்தி விளக்கமளித்தனர். கல்லூரி முதல்வர் முருகானந்தம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை பாப்பாத்தி வரவேற்புரையாற்றினார்.
மாணவர்களுக்கு வினாடிவினா, பேச்சுபோட்டி, பொதுஅறிவு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. இறுதியில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாநிறையில் கல்லூரி ஆசிரியை ரெட்லின்ஜானி நன்றியுரையாற்றினார்.