செண்டை மேளம் அடித்து பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்

கன்னியாகுமரி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஊட்டுவாழ்மடம் பகுதியில் செண்டை மேளம் அடித்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-15 11:06 GMT

கன்னியாகுமரி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஊட்டுவாழ்மடம் பகுதியில் செண்டை மேளம் அடித்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் இருந்து இன்று (15-ம் தேதி)  தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் செண்டை மேளம் அடித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில்:-         ஒன்றிய அரசில் பெண்களுக்கான மகத்தான திட்டங்கள் செயல்படப்பட்டுள்ளன. மோடி அரசால் ரூ. 8 லட்சம் கோடி மதிப்புரான வங்கி கடன்களும், ரூ.  40 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி உதவியும் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும் இயக்கத்தை பாரதிய ஜனதா அரசு அம்பலப்படுத்தி வருகிறது. மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தி இருப்பது லட்சக்கணக்கான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.      

 முத்ரா திட்டத்தின் கீழ் 46 கோடி நபர்களுக்கு கடன் வழங்கியதில் 31 கோடிக்கு மேற்பட்ட கடன்கள் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுயமரியாதை மற்றும் சுய கௌரவத்துடன் வாழ தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. என்று பேசினார்.        இந்த பிரச்சாரத்தின் போது எம் ஆர் காந்தி எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் முத்துராமன், சட்டமன்ற பார்வையாளர் கோபகுமார், மாநில செயலாளர் மீனாதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News