58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்காததால் வறண்ட கண்மாய்கள்

Update: 2023-11-17 06:11 GMT

58  கிராம கால்வாய்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

58 கிராம கால்வாயில் வைகை அணை தண்ணீரை திறக்க மறுப்பதால் இதை நம்பி உள்ள 35 கண்மாய்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயம் பாழ்படுவதோடு குடிநீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகிறது.உசிலம்பட்டி, விருவீடு பகுதி பயன் பெறுவதற்காக வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் திட்டம் 2007 ல் துவங்கப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பின் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்து உள்ளது. அணையில் 67 அடி வந்தவுடன் இக்கால்வாயில் தண்ணீர் திறப்பது என விவசாயிகள் அதிகாரிகள் மத்தியில் பேசி முடிவு செய்யப்பட்டது.ஆனால் அரசாணை எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. 2022 வடகிழக்கு பருவமழையின் போது கிடைத்த உபரி நீரை கொண்டு 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி இருந்தாலும் போதுமான மழை பெய்யவில்லை. ஆனால் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக மழை பொழிவால் 70 அடியை எட்டிவிட்டது.சமீபத்தில் பெய்த மழைக்கு உபரி நீரை ஆற்றில் திறந்து விட்டனர். இந்த உபரி நீரை 58 கிராம கால்வாயில் நுாறு கன அடியாவது விட்டிருந்தால் இத்திட்டத்தில் உள்ள 35 கண்மாய்கள் நிறைந்து இருக்கும். ஆனால் ஆற்றில் திறந்து விட்டு வீணாக கடலில் கலக்க வைத்துள்ளனர். என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

Tags:    

Similar News