புனித சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் வைத்து கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்தனர்.
தூத்துக்குடி புனித சூசையப்பர் தேவாலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் சமத்துவ பொங்கலை கொண்டாடி வருகின்றனர் ஆனால் இந்த வருடம் தூத்துக்குடி மாவட்டத்தில்மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வாழ்வில் இயல்புநிலை திரும்பவும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து மக்கள் வாழ்வு செழிக்கவும் உழவர்கள் வாழ்வு பெருகவும் வேண்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் வண்ணக் கோலமிட்டு அதில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த பொங்கல் சமர்ப்பணம் என எழுதி அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
பின்னர் நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் ஏராளமானோர் கலந்துகொண்டுஉலகில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் மேலும் இது போன்ற ஒரு பேரிடர் வரக்கூடாது எனவும் இறைவனை வேண்டினர்.