புனித அடைக்கல மாதா ஆலய பொங்கல் விழா ஜல்லிக்கட்டு

முக்காணிபட்டி புனித அடைக்கல மாதா திரு ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் பங்கேற்றன.

Update: 2024-01-19 08:39 GMT
புதுக்கோட்டை மாவட்டம் முக்காணி பட்டி-யில் புனித அடைக்கல மாதா திரு ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது இப் போட்டியில் 650 ஜல்லிக்கட்டு காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக கோட்டாட்சியர் முருகேசன் உறுதிமொழி வாசிக்க மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் கோட்டாட்சியர் முருகேசன் கொடியசைத்து போட்டியை தொடக்கிவைத்தார். முதல் காளையாக புனித அடைக்கல மாதா திரு ஆலய வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடி வாசலிருந்து சீரிவந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். அதே போல் பல்வேறு காளைகள் மாடுபிடி வீரர்கள் தனது கொம்பால் தூக்கி வீசியது. அதே போல் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளை களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும், போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களும் , கட்டில், சேர், டிரஸ்சிங் டேபிள், மின் விசிறி, சைக்கிள்கள், சில்வர் அண்டா, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News