ராசிபுரம் வநேத்ரா குழுமம் சார்பில் பொங்கல் விழா

ராசிபுரம் வநேத்ரா குழுமம் சார்பில், பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் விமர்சியாக கொண்டாடப்பட்டது.;

Update: 2024-01-14 16:21 GMT

நடனம் ஆடும் மாணவிகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன், முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு செயல் இயக்குநர் மஞ்சுமுத்துவேல் தலைமை வகித்தார். இயக்குநர் - செல்வகுமரன், கல்லூரி முதல்வர்கள் எஸ்.பி.விஜய்குமார், எம்.மருதை, ஆர்.மணி மற்றும் துணை முதல்வர் மஸ்டெல்லா பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கரும்பு, மஞ்சள், வண்ண தோரணங்களோடு, புது பொங்கல் பானைகள் கொண்டு சிறப்பாக பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. முன்னதாக, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளான தனிநபர் மற்றும் குழு நடனம், கிராமிய கலைகளான கும்மி, சிலம்பாட்டம் போன்றவையும், தமிழரின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான கபடி போட்டி,கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி, மற்றும் முறுக்கு கடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் சிறப்பாக விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பொங்கல் விழாவை விமர்சியாக கொண்டாடினர்.

Tags:    

Similar News