பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: எல்லையில் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு வாகனங்களில் படையெடுத்த மக்களால் எல்லையோரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-01-12 14:47 GMT

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு வாகனங்களில் படையெடுத்த மக்களால் எல்லையோரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் ஞாயிறு 14ஆம் தேதி முதல் வரும் புதன் கிழமை 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால் கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய தமிழர்கள் ஒசூர் வழியாக தமிழகத்திற்கு இன்று மதியம் முதலே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

ஒரே நேரத்தில் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக தமிழகத்திற்கு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் படையெடுத்ததால் தமிழக - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடி முதல் ஒசூர் மாநகராட்சி முதலாவது சிப்காட் பகுதி வரை சுமார் 3கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News