சத்துணவில் சர்க்கரைப் பொங்கல்!
Update: 2024-06-10 08:34 GMT
சத்துணவில் சர்க்கரைப் பொங்கல்
தமிழக அரசின் ஆணைப்படி இன்று 10.06.2024 இன்று பள்ளிகள் திறந்த நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட வேண்டும் என்ற ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் சத்துணவு மூலம் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.