முப்புடாதி அம்மன் கோயிலில் பொங்கல் சிறப்பு பூஜை
கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-17 02:40 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோயிலில் மகர சங்கராந்தி முன்னிட்டு இன்று காலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, எஜமான சங்கல்பம், கும்ப ஜெபம், அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடா்ந்து மூலவருக்கு தங்க கவச அலங்காரமும், உற்சவருக்கு முத்தங்கி அலங்காரமும் சாத்தப்பட்டு சிறப்பு பூஜையும், சிறப்பு சோடஷ தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.