பொன்முடி வழக்கு:பழிவாங்கும் நோக்கம் அல்ல
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு பாஜ.,வால் தொடங்கப்பட்ட வழக்கு அல்ல; பழிவாங்கும் நோக்கமும் அல்ல என, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு பாஜகவால் தொடங்கப்பட்ட வழக்கு அல்ல பழிவாங்கும் நோக்கமும் அல்ல வேலூரில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் பேட்டி.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த ஓல்ட் டவுன் பகுதியில் ACS மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், பல் மருத்துவம், கண் காது மூக்கு தொண்டை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது எதன் எடுத்து அங்கு கண் சிகிச்சை பெற்ற அவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். நிகழ்ச்சிப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதி கட்சிகளின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 75 மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது அவர்கள் பிரச்சினைகளை தீர்க்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது மேலும் 300 முகாம்களை நடத்த வேண்டும் மூன்று லட்சம் மக்களை சந்திக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நோயில்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை வேலூரில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன ஆறு தொகுதியிலும் உள்ள படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனையடுத்து உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் பொன்முடி தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பொன்முடி வழக்கில் மத்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. பொன்முடி வழக்கில் மத்திய புலனாய்வுத்துறை இதை செய்யவில்லை . இந்த வழக்கு பாஜகவால் தொடரப்பட்ட வழக்கு அல்ல பழிவாங்கும் நோக்கமும் அல்ல. மிக்ஜாம் புயல் முதன் முதலில் சென்னை தாக்கும் என அறிவித்தார்கள் இரண்டாம் முறை அறிவித்த போது ஆந்திரா செல்லும் என அறிவித்தார்கள் ஆகவே முன்னேற்பாடுகளை செய்ய திமுக ஆட்சி தவறியது. வானிலை மையம் தெளிவாக அறிவித்து வந்தது ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தென் மாநிலங்களிலும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் , என ஏ.சி சண்முகம் கூறினார்.