பொன்னமராவதி திருச்செந்தூருக்கு மீண்டும் பேருந்து இயக்க வலியுறுத்தல்
பொன்னமராவதியில் இருந்து திருச்செந்தூருக்கு மீண்டும் பேருந்து இயக்க வலியுறுத்தியுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-02 09:42 GMT
பொன்னமராவதி பேருந்து நிலையம்
பொன்னமராவதி பேரூராட்சி வளையப்பட்டி, புதுப்பட்டி உட்பட சுற்றியுள்ள ஊராட்சிகளில் சுமார் 50,000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
பொன்னமராவதியில் இருந்து சிங்கம்புணரி- மதுரை வழியாக திருச்செந்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கரோனா காலகட்டத்தில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மதுரை சென்று அங்கிருந்து வேறு பஸ்ஸில் திருச்செந்தூருக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே ஏற்கனவே இயக்கப்பட்ட வழித்தடத்தில் பொன்னமராவதியில் இருந்து திருச்செந்தூருக்கு மீண்டும் அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.